search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நகை பொருட்கள் கொள்ளை"

    திருச்சியில் வெவ்வேறு இடங்களில் பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையடித்து சென்ற திருடர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
    திருச்சி:

    திருச்சியில் வெவ்வேறு இடங்களில் பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையடித்து சென்ற திருடர்களை போலீசார் தேடி வருகிறார்கள். இதுபற்றிய விபரம் வருமாறு :-

    திருச்சி கருமண்டபம் விநாயகர் நகர் முதல் தெருவைச் சேர்ந்தவர் பத்மநாதன் (வயது 50) இவர் கடந்த 28-ந்தேதி உடல்நல சிகிச்சைக்காக வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் சென்று விட்டார். நேற்று காலை அவரது வீட்டிற்கு வேலைக்கு வந்த பெண் கீழ் வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி யடைந்தார்.   

    இது குறித்து மேல் வீட்டில் குடியிருக்கு வீட்டு உரிமையாளர் மூலம் பத்மநாதனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. திருச்சி செசன்ஸ் கோர்ட்டு போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து பார்த்தனர். கொள்ளையர்கள் உள்ளே புகுந்து  பீரோவில் இருந்த 9 பவுன் தங்கநகை மற்றும் ரூ.14 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடி சென்றது தெரியவந்தது. பீரோ மற்றும் கதவுகளில் இருந்த கைரேகைகள் மூலம் போலீசார் கொள்ளையர்கள் யார் என துப்பு துலக்கி வருகிறார்கள். 

    இதேபோன்று திருச்சி விமான நிலையம் அருகில் உள்ள அன்பில் நகர் கபிலன் நகர் பகுதியைச் சேர்ந்த பழனியப்பன் என்பவர் கடந்த 27-ந்தேதி வீட்டை பூட்டி விட்டு சென்றபோது மர்ம நபர்கள் அவர்கள் வீட்டிற்குள் புகுந்து 2 வாட்ச் மற்றும் பணத்தை  திருடி சென்று விட்டனர். இது குறித்து பழனியப்பன் திருச்சி ஏர்போர்ட் போலீசில் புகார் செய்தார். பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையடிக்கும் நபர்கள் யார் என திருச்சி போலீசார் தீவிரமாக துப்பு துலக்கி வருகிறார்கள்.
    திருச்சி உறையூர் மருதாண்டாக்குறிச்சியில் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த நகை- பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
    திருச்சி:

    திருச்சி உறையூர் மருதாண்டாக்குறிச்சி சந்தோஷ் நகரை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி லதா(வயது 48). இவர்கள் சம்பவதன்று வீட்டை பூட்டி விட்டு தனது மகன் வீட்டிற்கு சென்றனர். பின்னர் வீடு திரும்பினர். அப்போது வீட்டின்கதவு பூட்டு  உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 5 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.   

    மேலும் வீட்டில் இருந்த எல்.இ.டி. டி.வி, ஹோம் தியேட்டர் உள்ளிட்ட ரூ.1 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் திருடப்பட்டிருந்தது.

    இது குறித்து உறையூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். கொள்ளை போன நகை-பொருட்களின் மதிப்பு ரூ.2 லட்சமாகும்.
    ×